தமிழ்விடு தூது :
தமிழ்விடு தூது என்பது கலிவெண்பா வடிவில் எழுதப்பட்ட ஒரு தூது வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியம் ஆகும்.
இது மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தள் காதலை கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.
இதனை முதன் முதலில் 1930 இல் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்தார்.
பாடல் விளக்கம் :
பெருமை பெற்ற தமிழ்மொழியே! எனக்குத் துணையாயிருப்பதனால் நான் இதுவரை உயிரோடிருக்கிறேன். இல்லையெனில் எப்போதோ மாய்ந்திருப்பேன், விண்ணுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவாகிய அமுதத்தைத் தந்தாலும் அதனையும் விரும்பமாட்டேன். காம மயக்கத்தால் வருந்தினேன். போர்வெல்லும் யானையுண்ட விளங்களி (ஒருவகை நோய்) போன்றேன். காமமாகிய மலையை யொத்த யானை தின்ற கரும்பு சக்கை போலவும் ஆயினேன். நல்ல அவரைக் கொடிபடர்ந்த (அவரைக்கொடி நிழலில் இருந்தால் அறிவு மங்கும்) நிழலில் இருப்பவரின் மனம் போல வாடினேன். கொடிய பனியால் வாடிய செந்தாமரை மலரைப் போன்றிருந்தேன். தமிழே ஓடத்தின் மேலேறிக் கொள்ளம் பூதூரில் வெள்ளப் பெருக்கைக் கடந்து சென்றாய் நீ, எனது காம வெள்ளத்திலிருந்து என்னை விரைவில் கடத்திவிட வேண்டுமன்றோ? கொள்கைகளில் மாறுபட்ட சமணர்களை வலியக் கழுவேறும்படி செய்தாய், என்னைச் சினந்து வரும் காமனையும் கழுவேற்ற மாட்டாயோ?
முற்காலத்தில் திருநீற்றைப் பூசியே ஆங்குப் பாண்டியனது முதுகின் வளைவைத் (கூனல் முதுகை) தொலைத்தாய், இந்நாள் மன்மதன் செய்யத சுரும்பு வில்லின் வளைவை நீக்கமாட்டாயோ? அப்பாண்டியனுக்கு உடம்பில் ஏற்பட்ட வெப்பு நோயை நீக்கினாய், இந்நாள் என் கொடிய காமத்தால் உண்டாகிய வெப்பு நோயை நீக்கக் மாட்டாயோ? சமணர் தந்த நஞ்சினை அமுதமாக்கினாய், இன்று எனக்கு ஆக்கிப் படைக்கும் நஞ்சினை அமுதமாகச் செய்யமாட்டாயோ? தமிழே நீ ஒருவராலும் கொடிய தீயினுட் கிடந்து வெந்துபோகாமல் உய்ந்திருந்தனையென்று அறிஞர்கள் சொல்லுவார்கள், அதேபோல காம மாகிய கொடிய தீயானது என்னைச் சுடாதிருக்குமாறு செய்ய மாட்டாயோ? கொங்கு நாட்டில் வந்து அந்தப் பனியால் வாடாமல் அங்குள்ளவர் நுன்பத்தை நீக்கினாய், இப்பனியால் நான் வாடாமற் செய்ய மனமிரங்க மாட்டாயோ?.
0 Comments