google-site-verification: googlef09a89005d7755ea.html புறநானூறு பாடல் & விளக்கம் | சிறப்பு தமிழ் இரண்டாம் பருவம்

புறநானூறு பாடல் & விளக்கம் | சிறப்பு தமிழ் இரண்டாம் பருவம்

 

புறநானூறு :

புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் சங்க இலக்கியத் தொகுப்பாகும். இது புறப்பொருள் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது. பல்வேறு புலவர்கள் பாடியுள்ள இப்பாடல்கள் அக்காலத்திய அரசர்கள், குறுநில மன்னர்கள், வீரர்கள், வள்ளல்கள் மற்றும் சாதாரண மக்களின் வீரம், கொடை, ஆட்சிமுறை, போர் நெறிமுறைகள், சமூக வாழ்க்கை, பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு விஷயங்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

 இது சங்க கால வரலாற்றை அறிந்துகொள்வதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. புறநானூற்றுப் பாடல்கள் அக்காலத் தமிழர்களின் உயர்ந்த பண்பாடு, வீரம், கொடை, நட்பு, அறநெறி போன்ற விழுமியங்களை ஆழமாக எடுத்துரைக்கின்றன. 

மேலும், அக்காலத்திய அரசியல் நிலை, போர் முறைகள், வணிகம், கல்வி போன்ற பல தகவல்களையும் இப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. எளிய ஆனால் வலிமையான மொழி நடையில் அமைந்திருக்கும் புறநானூற்றுப் பாடல்கள், அக்கால மக்களின் உணர்வுகளையும், வாழ்வியலையும் நமக்குத் துல்லியமாக உணர்த்துகின்றன. சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்பான பண்புகளைக் கொண்டுள்ள புறநானூறு, தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான பொக்கிஷங்களில் ஒன்றாகும்.

ஜி.யு.போப் அவர்களை கவர்ந்த நூல் இதுவாகும். இந்நூலின் சில பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

(புறநானூறு - பாடல் 01)

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

திணை: பொதுவியல்

துறை: பொருண்மொழிக் காஞ்சி

"ஆசானுக்கு உதவி செய்து கற்கவேண்டும். அவருக்கு மிக்க பொருளைக் கொடுத்து கற்க வேண்டும். முன்னோர்கள் கற்றது போல் பணிவோடு கற்பது நல்லது! ஒரே வயிற்றில் பிறந்தாலும் கற்றவனையே தாய் விரும்புவாள். ஒரு குடும்பத்தில் வயதால் மூத்தவனைக் காட்டிலும் கற்ற ஒருவனையே, அவன் இளையனாக இருந்தாலும் முந்துரிமை தந்து போற்றுவாள். அறிவுடையோன் வழியில்தான் ஆட்சியும் செல்லும்! வேற்றுமை தெரிந்த நால்வகை இனத்தவரில் கீழ் இனத்தவன் கற்றால் அவளை மேலினக்கவன் மேலாக மகிப்பர்!" என கல்வியின் சிறப்பினைப் போற்றி உயர்த்திப் புலவர்படுகிறார்.

பாடலின் பின்னணி:

கணியன் பூங்குன்றனார் பரந்த மனப்பான்மை உடையவர், இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதியவர். மக்கள் அனைவரையும் தமது உறவினராகக் கருதியவர். பரிசில் பெறுவதற்காக எந்த ஒரு மன்னரையோ அல்லது வள்ளலையோ புகழ்ந்து பாடாமல், இவர் உலக இயல்பைப்பற்றிய தம் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.

(புறநானூறு - பாடல் 02)

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி.

விளக்கம் :

எல்லா ஊரும் எமக்குச் சொந்த ஊர்தான். எல்லோரும் எமக்கு உறவினர்தான். தீமையும் நன்மையும் பிறரால் வருவன அல்ல. அவை தாமே வருவன. துன்புறுவதும் துன்பம் தவிர்தலும் (மகிழ்தலும்) அதைப் போன்றவை தான். அதாவது துன்பமும் இன்பமும் பிறரால் வருவன அல்ல. அவையும் தாமே வருவனதான். சாதல் என்பது புதியது இல்லை; வாழ்தல் இனிமையானது என்று மகிழ்வதும் இல்லை. (உலகின் மேலுள்ள) வெறுப்பால் வாழ்வு இனியதல்ல என்று கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை.

Post a Comment

0 Comments