google-site-verification: googlef09a89005d7755ea.html குறுந்தொகை பாடல் விளக்கம் | சிறப்பு தமிழ் இரண்டாம் பருவம்

குறுந்தொகை பாடல் விளக்கம் | சிறப்பு தமிழ் இரண்டாம் பருவம்

குறுந்தொகை :

குறுந்தொகை என்பது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவது இடத்தை வகிக்கும் சங்க இலக்கியத் தொகுப்பாகும். இது நானூறு பாடல்களைக் கொண்டது, ஆனால் இதன் பாடல்கள் நான்கடி முதல் எட்டடி வரையிலான சிறிய அடிகளைக் கொண்டிருப்பதால் "குறுமை + தொகை = குறுந்தொகை" எனப் பெயர் பெற்றது. பல்வேறு புலவர்கள் பாடியுள்ள இப்பாடல்கள் பெரும்பாலும் அகப்பொருள் சார்ந்த உணர்வுகளை மிகச் சுருக்கமாகவும், அதே சமயம் ஆழமாகவும் வெளிப்படுத்துகின்றன. குறுந்தொகை சங்க இலக்கியத்தின் மிக முக்கியமானதும், உணர்வுப்பூர்வமான கவிதைகளின் களஞ்சியமாகவும் கருதப்படுகிறது.

(குறுந்தொகை பாடல் - 01)

விளக்கம் : 

இந்த காதல் கட்டுப்படுத்தப்பட வேண்டியது என்று என்னை இடித்துரைக்கும் நண்பா! உன் பேச்சை நான் கேட்கவில்லை என்று உனக்கு மனக்குறை. உன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று தான் எனக்கும் ஆசை ஆனால் முடியவில்லையே! வெயில் காயும் பாறை மேல் வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கையில்லாத வஊமையைக் கண்களாலேயே காவல் காக்கச் சொல்வது போல் இருக்கிறது எனது நிலை. வெண்ணெய் உருகும் போது அதை கையில் எடுக்கவும் முடியாமல் சதமிட்டுக் கத்தி உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலை தான் என்னுடையது. இக்காதல் நோய் என்னுள் பரவிக்கொண்டிருக்கிறது. தாங்கிக்கொள்ள முடியவில்லையே என்று தலைவன் புலம்புகிறான்.

குறுந்தொகை பாடல்- 02

விளக்கம் :

கோழி குக்கூ என்று கூவியது. அதற்கு நேரே எனது தோளை மணந்த தலைவரைப் பிரியச் செய்யும் வாளைப் போல விடியற்பொழுது வந்தது. எனது மாசற்ற நெஞ்சம் தலைவரை இனிப் பிரிந்திருத்தல் வேண்டும் என்பதால் அச்சத்தை அடைந்தது எனப் பூப்பெய்திய தலைமகள் ஒருத்தி இங்கே தன் உள்ளத்து உணர்வை வெளியிடுகிறாள்.

Post a Comment

0 Comments