கிராமப்புறங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு குறிப்பாக வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கும், வேலையில் அமர்ந்து தினம் வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருப்பது இந்த மெட்ரோ ரயில் நிலையம்.
"மக்களின் பயணம், நிலையான வளர்ச்சி" என்ற நோக்கத்துடனும் பாதுகாப்பான, விரைவான, நம்பிக்கைக்கு உகந்த, அணுகத்தக்க, எளிதான, வசதியான, செயல் திறனுள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க விரும்பி பயணிக்கும் பொது போக்குவரத்து சேவையை வழங்கும் குறிக்கோளுடன் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இதனை தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனத்தில் கீழ் இயக்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 03/12/2007 அன்று பதிவு செய்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. எளிய மக்களின் வாழ்வில் பெரும் மைல்கல்லாக பயணித்து வருகிறது. ஏனெனில் நகர் புறங்களில் வசிக்கும் மக்கள் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்றும் ஆட்டோவில் சென்று சேரும் இடத்திற்கு நேரத்தையும் பணத்தையும் அதிக அளவில் மிச்சப்படுத்தி பெருமளவில் சேமிப்பை சேர்க்க உதவுகிறது.
உதாரணத்திற்கு சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் வரை செல்ல ஐம்பது ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதுவே நாம் கார், ஆட்டோ, Ola, Rapido போன்றவற்றில் பயணித்தால் சுமார் நானூறு முதல் ஐநூறு வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதிலும் வாட்ஸ்அப் மின்னட்டை, QR code போன்ற இதர வசதிகளை பயன்படுத்தி கொண்டு பயணித்தால் கழிவு அடிப்படையில் இன்னும் கட்டணம் மிச்சமாகிறது.
நிலையத்தில் மற்றும் ரயில் உள்ளே பெண்களுக்கான தனி இட வசதிகள் செய்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிலையத்தை விட்டு வெளியேறி பிற பகுதிகளுக்கு செல்ல சைக்கிள் மற்றும் சிறு பேட்டரி கார்கள் போன்றவற்றை கொண்டு கடக்க இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாக இருப்பதில் பெரும் பங்கு மாற்றுத்திறனாளிகள் பயன் பெரும் வகையில் நிலையம் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் வெளிப்பகுதியில் இருந்து உள்ளே சென்று பயணச்சீட்டு வாங்கும் வரை மிக எளிதாக விளங்கும் வண்ணம் நடைபாதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. கழிவறைகள் உட்பட மாற்றுத்திறனாளிகள் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படும் இத்திட்டம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்றால் மிகை ஆகாது. தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக திரு. மனோஜ் ஜோஷி, IAS., செயல்படுகிறார்.
இவரை மத்திய அரசு இப்பணியில் அமர்த்தும. இயக்குனர்களாக எட்டு பேர் கொண்ட குழுக்கள் அடங்கும். அவற்றில் நான்கு பேரை மத்திய அரசும் மற்ற நான்கு பேரை தமிழ்நாடு அரசும் நியமிக்கும். குற்ற செயல்களுக்கு அறவே இடம் கொடுக்காத வண்ணம் தண்டனைகளும் அபராதகளும் விதிக்கப்பட்டுள்ளது. Rail O & M Act 2002 Section 78 ன் படி ரயில்வே சொத்தின் பகுதிகளை துஷ்பிரயோகம் செய்தால் அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க கூடும். இந்தியாவை வல்லரசாக துடிக்கும் இளைஞர்களுக்கு ஏதுவாக போட்டி தேர்வுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் பற்றி கேட்க கூடும் விவரங்களை கட்டுரையாகுவதில் பயன் தரும் என்ற நம்பிக்கையுடன்.....வாழ்க இந்தியா.
- நாகூர் செய்கு அப்துல் காதிர்
Published in Nagore Puranam December month magazine 2023
0 Comments