நற்றிணை :
நற்றிணை என்பது எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக எண்ணப்படும் சங்க இலக்கியத் தொகுப்பாகும்.
இது அகப்பொருள் சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டு, பல்வேறு புலவர்களால் பாடப்பட்டு அக்கால மக்களின் காதல் வாழ்வு, இயற்கை வர்ணனைகள், சமூகப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
"நல்ல திணை" என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் இதன் பாடல்கள் தலைவன் தலைவி இடையிலான காதல், பிரிவு, ஊடல் போன்ற அக உணர்வுகளையும், சங்ககால மக்களின் உணவு முறை, உடை, நம்பிக்கைகள் போன்ற சமூகக் கூறுகளையும் எளிய நேரடியான மொழியில் உணர்த்துகின்றன.
பொருத்தமான உவமைகளையும், உருவகங்களையும் கையாண்டுள்ள புலவர்களின் கவித்திறன் சங்க இலக்கிய மரபைப் பின்பற்றி அமைந்துள்ளது; சுருங்கக் கூறின், நற்றிணை சங்க இலக்கியத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகத் திகழ்ந்து, அக்கால மக்களின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் நமக்குத் தெளிவாக உணர்த்தும் தமிழ் இலக்கியப் பொக்கிஷமாகும்.
(பாடல் - 01)
ஆலம்பெரிசொத்தனொர் – திணை : நெய்தல்
துறை: மடல் வலித்த தலைவன் முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்.
விளக்கம் :
யான் கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது: ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பளை. உமிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் சுந்தகட் எல்லாம் விரும்பகலைச் செய்கின்ற அகிக்க மண்டிலமோ தன்னொளி விசும்பின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; முற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைக் காவுகலாலே: கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் இயங்குகின்ற குரலுடனே அளாவிக்கொண்டு; இராப் பொழுதென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி கையறவைத் தந்தது கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலைமையையுடைய யான்; இவ்வாறு துன்பஞ் சூழ்ந்துகொள்ள இவற்றிடையே இனி எவ்வாறு வாழ்வேனோ?
(பாடல் - 2)
துறை: பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. குறிபெயர்த்தீடும் ஆம்.
விளக்கம் :
புதிதாக வந்த பாணர்கள் பாடும் மெல்லிய இசைப்பாட்டைப் போல வெண்மையான வலம்புரிச் சங்குகள் ஒலிக்கும் விளங்கிய கடல் நீரை உடைய நெய்தல் நிலத் தலைவரே, யாம் ஒருநாள் விளையாடும் எம்தோழிகளுடன் வெள்ளிய கடற்றுறை மணலில் சென்று விளையாடி இருந்தோம். அப்பொழுது ஒரு புன்னை விதையை மணலுள் புதைத்து விளையாடிவிட்டு வரும் பொழுது அவ்விதையை மறந்துவிட்டோம். மீட்டும் அவ்விடம் சென்று காண்கையில் அப்புன்னை விதை வேர் ஊன்றி முளைத்து நின்றது. அது கண்டு நெய் கலந்த பாலுடன் கூடிய நீரை விட்டு அதனை வளர்த்தோம். எம் அன்னை அதனைக் கண்டு மகிழ்ந்து, 'நீங்கள் வளர்த்து வரும் இப் புன்னையானது நும்மினும் சிறந்தது அன்றோ! இது நும்முடன் பிறந்த தங்கையாகும்,' என்று அதன் சிறப்பைக் கூறினாள். எனவே, எம் தங்கையாகிய அதன் எதிரே நாம் சந்திப்பது மிகவும் நாணம் தருவதாய் உளது! அதன் எதிர் நகைத்து விளையாட மிகவும் வெட்கப்படுகிறோம். நீர் எம் தலைவிக்கு அருள் புரிவதாயின் "ஐயனே, இப்பரந்த கடற்கரையில் இன்னும் எத்தனையோ மரங்கள் இருக்கின்றனவே! அவற்றுள் ஏதாவது ஒரு மரத்தடிக்குச் சென்று விடுங்கள்," என்று கூறினாள்.
0 Comments