google-site-verification: googlef09a89005d7755ea.html மூன்றாம் சேரமான் பெருமாள் தொடர் - 02 | முஹம்மது சுஹைப்

மூன்றாம் சேரமான் பெருமாள் தொடர் - 02 | முஹம்மது சுஹைப்

 


இதனையெல்லாம் கண்டும் காணாதவாறு நோட்டமிட்டு கொண்டிருந்தனர் சேனாதிபதியின் ஒற்றர்கள் காவலர்களாக. பின்னர் இரவு உணவு பரிமாறப்பட்டது. அரேபியர்கள் ஐவரும் ஒன்றுகூடி ஓர் பெரிய தட்டில் வைத்து உண்டனர். இதனை பார்த்த காவலாளிகளில் சிலர் ஏற்றத் தாழ்வு இல்லாமை கண்டு புன்முறுவல் பூத்தவராய் ஒரைவரையொருவர் கொண்டிருந்தனர்.. பார்த்துக்

அரேபியர்கள் வெளியே வந்து மீண்டும் கை கால் முகத்தினைக் கழுவி விட்டு ஐவரும் ஒன்று கூடி ஒருவர் பின் நால்வராக முன்பு செய்தது போலவே மேலும் கீழும் எழுந்து உட்கார்ந்து செயலை செய்து முடித்து பின்னர் அனைவரும் உறங்க சென்றனர். இவைகள் எல்லாம் அந்த சேர நாட்டு மண்ணுக்கும், சேனாதிபதிகளுக்கும் வினோதமாகவே இருந்தது.

உறங்க சென்ற அரேபியர்களில் ஒருவர் வெளியே வந்து, காவலர்களே! எங்களுடைய மற்ற சகாக்கள் கடற்கரை ஓரத்தில் கப்பல் கட்டும் துறை அருகாமையிலேயே தங்கியுள்ளனர். அவர்களுக்கு இங்கிருந்து சில உணவுகளை எடுத்து செல்ல அனுமதி தர வேண்டும் என்பதாக கேட்டுக் கொண்டார்.

இதனைத் காவலர்கள் தலைமை அமைச்சரிடம் எடுத்துரைக்கவே, அவரோ அவர்களுக்கு அனுமதி கொடுங்கள். இருப்பினும் உங்களில் இருவர் அவர்களுடன் சென்று அவர்களின் நடத்தைகளைக் கண்காணியுங்கள் என்றார். அமைச்சரின் உத்தரவுப்படி இரண்டு அரேபியர்களும் அவர்களுடன் இரண்டு காவலர்களும் அரண்மனையில் இருந்து கொஞ்சம் உணவுகளை எடுத்துக் கொண்டு வெளியேறினர். இவர்களை கண்காணித்த படியே வேணு என்ற தலைமை ஒற்றனும் மறைவாகவே உடன் சென்றான்.

அரண்மனை மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் பாமர மக்களைப் போல் உலாவி திரிவது ஒற்றர்கள் முதன்மையான பணி. முதலாம் சேரமான் பெருமாள் நாயனார் காலந்தொட்டு இந்த ஒற்றர் ராஜகுருகளின் தலைமையிலேயே இயங்கி படை வந்தது. அவர்களில் வேணு என்பவனே தற்போது தலைமை ஒற்றன். இவன் ராஜகுரு ராமநம்பியின் உண்மை விசுவாசி. என்னதான் மன்னர் நாட்டை ஆண்டாலும் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு ராஜகுரு அனுமதி அளித்தாலே அது செயல்படும். அதன்படியே ராஜகுரு கையில் வைத்தாட்ட படும் பொம்மைகள் போலவே மன்னர் சேரமான் பெருமாளை மாற்ற நினைத்தார்.

இருப்பினும் அறிவுமுதிர்ச்சியும் ஆன்மீகத் தெளிவும் கொண்ட மன்னர் பிரான் அதற்கு வழி வகுக்கவில்லை என்றாலும் ராஜகுருக்களையே முதன்மைப்படுத்துவது என்பது சேர சாம்ராஜ்யத்தின் பாரம்பரிய செயல் என்பதால் ராஜகுருவையே எல்லாவற்றிற்கும் தலைமை தாங்க வைப்பார்.

கப்பல் கட்டும் துறை சென்ற அரேபியர்களை மற்ற அரேபியர்கள் ஆரத் தழுவிக் கொண்டனர். அரண்மனையிலிருந்து எடுத்து வரப்பட்ட உணவுகளை ஏனைய அரேபியர்கள் பகிர்ந்து உண்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய நால்வரும் (இரண்டு அரேபியர் & இரண்டு காவலாளி) அரண்மனை வந்தடைந்தனர்.

அரேபியர்கள் இருவரும் அரண்மனை விருந்தினர் மாளிகைக்குள் உறங்க சென்றனர். சிறிது நேரத்தில் அரண்மனை முழுதும் சலசலப்பு. முதலாம் சேரமான் பெருமாளின் விலையுயர்ந்த கிரீடம் திருடு போனது.

காவலர்கள் எல்லாம் கிடுகிடுத்து போய்விட்டனர். ஐயோ! இச்செய்தி மன்னர் பிரானை எட்டினால் நம் நிலை என்ன ஆகுமோ? என்ற பயத்தில் அனைவரின் முகங்களும் பெரும் அச்சத்தில் மூழ்கின. செய்தி ராஜ குருவின் காதிற்கெட்டவே அவர் காவலாளியை அழைத்து, இதற்குத்தான் அந்த அரேபியர்களை அரண்மனையில் அனுமதிக்க வேண்டாம் தலைமை மன்னரிடம் என்று கூறினோம்.. காவலாளிகளே! அந்த கிரீடம் என்பது இந்த சேர சாம்ராஜ்யத்தின் செங்கோல் போன்றது. விடிவதற்குள் கண்டுபிடித்து இருந்த இடத்தில் வைத்து விடுங்கள் இல்லை எனில் உங்களின் நிலை 6T60T 60T ஆகுமோ? என்றவாறு சொல்லிவிட்டு மடாதிபத்திற்குள் சென்றார் ராஜகுரு.

காவலர்கள் ஊர் முழுதும் சென்று ஒவ்வொரு இடமாக அலசி ஆராய்ந்தனர். திடீரென ஒரு இடத்தில் அரேபியர்களை கண்காணிக்க சென்ற தலைமை ஒற்றன் வேணு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடப்பதை கண்ட காவலாளிகள் அதிர்ந்து போயினர்.

இதற்கு மேல் இதனை மூடி வைத்தால் நம் தலை துண்டாகி விடும் இச்செய்தியினை மன்னரிடம் எடுத்துச் செல்வோம் என்று நடந்தவைகளை எல்லாம் எடுத்துரைத்தனர்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் அவை கூடியது. மன்னர் பிரான், ராஜகுரு மற்றும் என அனைவரும் அமைச்சர் பெருமக்கள் ஒன்று கூடினர். தலைமை காவலாளி நேற்று இரவு முதலாம் சேரமான் பெருமாள் மன்னரின் விலை உயர்ந்த கிரீடம் காணாமல் போன செய்தியையும், கப்பல் கட்டும் துறைக்கு உணவு கொண்டு சென்ற அரேபியர்களைக் கண்காணிக்க சென்ற ஒற்றன் கழுத்து அறுபட்டு கிடந்ததையும் அவையில் எடுத்துரைத்தார்.

சட்டென எழுந்த ராஜ குரு ராம் நம்பி, மன்னர் பிரானே! இந்த அரேபியர்களை நம் மண்ணில் தங்க வைத்தால் நம் மண்ணின் புனிதம் கெட்டுவிடும் என்று இதற்காக தான் சொன்னேன். இப்போது பாருங்கள் நம் சேர நாட்டு சாம்ராஜ்யத்தின் செங்கோலான முதலாம் சேரமான் பெருமாள் மணிமுடி சூடி பேராட்சி புரிந்த கிரீடம் இன்று காணாமல் போய்விட்டது. இதற்கு முன் நம் சம்ராஜியத்தில் இது போன்று எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் நடந்தது கிடையாது. இது நம் சாம்ராஜ்யத்திற்கு மிகப்பெரிய இழுக்கு என்று ஆவேசமாக கூறிவிட்டு தனது ஆசனத்தில் அமர்ந்தார்.

ஐந்து அரேபியர்களையும் அழைத்த மன்னர் பிரான், என்ன நடந்தது? என்பதனை முழுமையாக இருந்தவர்கள் விசாரித்தார். அங்கு எல்லாம் இத்துடன் அரேபியர்களின் கதை முடிந்து விட்டது. ஒன்று அவர்கள் சிறை சேதம் செய்யப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் என்று எண்ணி இருந்தனர். ஆனால் அங்கு நடந்ததோ வேறு.

தனது ஆசனத்தில் இருந்து எழுந்த மன்னர், பன்னெடுங்காலமாக நமது சாம்ராஜ்யத்தின் அடையாளமாக திகழ்ந்த அந்த கிரீடத்தைத் திருடியவனையும், நமது தலைமை ஒற்றன் வேணுவைக் கொலை செய்தவனையும் நானே கண்டுபிடித்து இந்த அவையில் சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவையினரை வணங்கி விட்டு தனது மாளிகைக்குள் சென்றார் மன்னர். அங்கு மூத்த அமைச்சரிடம் நடந்தவைகள் குறித்து ஆலோசித்தார்.

அன்று இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் இருந்த மன்னர் பிரானுக்கு ஒரு யோசனை தோன்றியது. முதலில் நாம் ஆளும் இந்த மண்ணில் என்ன நடக்கிறது என்பதனை அறிய வேண்டும். அதற்காக மன்னர் தான் சாதாரண குடிமக்களைப் போல் உடைமைகளை மாற்றிக்கொண்டு ஊருக்குள் உலாவி நடப்பது அறிய போவதாக தலைமை அமைச்சரிடம் கூறினார். மன்னர் பிரானே! தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதாக இதனை ஆரம்பத்தில் மறுத்த அமைச்சர், பின்னர் மன்னரின் உத்தரவுக்கு இணங்க ஏற்றுக்கொண்டார்.

அவ்வாறே மறுநாள் காலையில் அவை முடிந்ததும், மன்னர் பிரான் தனது அரச உடைமைகளை மாற்றிக்கொண்டு பாமர குடிமக்களைப் போல் ஊருக்குள் உலாவி கொண்டிருந்தார்.

எழில் கொஞ்சும் நகரம், இயல்பான மக்கள் நட்புறவு, நல்லிணக்கம் இவையெல்லாம் வாழ்வு, பழக்கவழக்கங்கள் மன்னரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூரியன் மேற்கே மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. மாலை பொழுதானதும் வேத கானங்கள் பாடப்பட்டன.

மன்னர் பிரான் சென்றபோது அவரைப் அருகாமையில் இருந்த கோயிலுக்குள் பின்தொடர்ந்து சென்று மர்ம நபர் ஒருவரின் கையில் கத்தி இருப்பதனை எதிர்பாராத விதமாக அவ்விடத்திற்கு வந்த அத்ஹம் மற்றும் குஹாபா என்ற அரேபியர்கள் பார்த்து அவனை மடக்கி பிடித்தனர். அந்த நபரின் கை மற்றும் கால்களைக் கட்டி போட்டுவிட்டு நடப்பவைகளை அவ்விருவரும் நோட்டமிட்டு கொண்டிருந்தனர்.

மு. முஹம்மது சுஹைப் 

Published in Nagore Puranam February month magazine 2025

Post a Comment

0 Comments