ஒத்தையடி பாதையிலே ஒய்யாரமா போர புள்ள
ஒத்த வார்த்தை பேசுன என்ன கொறைஞ்சா போயிடுவ
ஒத்த கண்ணு பார்வையால என்ன கிறுக்கு புடிக்க வைக்காத
ஒத்த கால் செருப்பாட்டம் நான் பித்து புடிச்சி போயிடுவ
நேத்து கூட கனாவுல வந்து காது கடிச்சி போனியே
காதுல காதல சொல்லி என்ன சாச்சிபுட்டியே
ஏண்டி புள்ள மனசுக்குல்ல திரிய வைக்குற
எரிமல போல அதை எறிய வைக்குற
உன்ன தவிர வேற யாரும் மனசுல இல்லடி
உம்பேர தவிர வேற ஏதும் நெஞ்சில இல்லடி
உன் நெனப்பு வாரையில மார்கழியிலும் வேர்க்குதடி
உன்ன காணாத நேரமெல்லாம் நரகமா மாறுதடி
நீயும் உன் மனசுல இருக்கிற காதல சொல்லடி
மாம பஞ்சு மிட்டாய் கணக்கா கரையிரண்டி.
- பாமரனுக்கான கவிஞன் ஈ.த.வினோத் குமார்
Published in Nagore Puranam April month magazine 2025
0 Comments