உலக புத்தக நாள் ஏப்ரல் 23 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தொன்மையான மொழி தமிழ் கிடைக்கப்பெற்ற தமிழ் நூல்களில் காலத்தால் முந்தியது தொல்காப்பியம்.
தமிழில் முதன்முதலாக 1887 ல் சி.வை. தாமோதரம் பிள்ளை கலித்தொகையையும் 1889ல் உ.வே.சாமிநாதையர் பத்துப்பாட்டையும், 1892ல் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியத்தையும், 1894ல் உ வே சா புறநானூற்றையும், 1903ல் ஐங்குறுநூற்றையும், 1904ல் பதிற்றுப்பத்தையும், 1914ல் நாராயணசாமி ஐயர் நற்றிணையையும், 1915ல் சௌ அரங்கசாமி ஐயங்கார் குறுந்தொகையையும், 1920ல் இராசகோபால ஐயங்கார் அகநானூற்றையும் அச்சேற்றினர்.தமிழ் இலக்கிய செல்வங்களை உலகறிய செய்தனர்.
ஐரோப்பிய மொழிகளுக்கு உரிய பல வேர் சொற்கள் தமிழில் உள்ளவை என்று ஞானப்பிரகாச அடிகள் கூறினார்.
உலக புத்தக நாள் உணர்த்துவது வாசிப்பையே. எல்லாரும் விரும்புவர் விரும்பும் புத்தகங்களை வாங்கி படிக்க முடியாவிடினும் வாகாய் படிக்க உதவுவது நூல் நிலையங்கள் தமிழ்நாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்திற்கு 1890 இல் சென்னை ஆங்கிலேய ஆளுநர் லார்ட் கன்னிமாரா அடிக்கல் நாட்டினார். 1896 இல் இந்த நூலகம் கட்டி முடித்து திறக்கும் பொழுது அவர் லண்டன் சென்று விட்டார் ஆனால் அன்றைய ஆளுநர் ஆர்தர் எலிபங்க் கன்னிமாராவிற்கு மதிப்பு கொடுத்து நூலகத்திற்குக் கன்னிமாரா நூலகம் என்று பெயர் சூட்டினார்.
அறிவு தனி மனித உடமை அல்ல அனைவருக்கும் பொதுவானது அனைவரும் அறிவு பெற புத்தகங்களை வாங்க அனைவராலும் முடியாது அனைவருக்கும் அவரவர் விரும்பும் புத்தகம் அவரவருக்கும் எளிதில் எளிய விலையில் கிடைக்க உதவுவது புத்தக நாட்டுடைமை.
உலக புத்தக நாளில் அனைவரும் புத்தக வாசிப்பை நேசித்து புத்தகம் வாங்கி அல்லது நூலகம் சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த உறுதி பூணுவோம். உயர்வு பெறுவோம்.
- கவிஞர் மு.அ. அபுல் அமீன்.
Published in Nagore Puranam April month magazine 2025
0 Comments