google-site-verification: googlef09a89005d7755ea.html புரிதல் | கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி

புரிதல் | கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி

 


உன்னை

தன்னில்

வளர்த்தவர்

உயர்வை

அடைகிறார்


பிறரிடம்

தவறுகள்

நடந்த போதும்

தடுமாற்றம் தந்து

தடம்புரண்டு விடாமல்

தடுப்பதும்


அநீதம்

அரங்கேறினால்

அமைதியாய் 

அதன் பின்புலம்

அறியவைப்பதும்


தோல்வியைத்

தழுவிய போதும்

வெற்றி பெற்றவரின்

முயற்சியைப்

பாராட்டச் செய்வதும்


குற்றம்

நிரூபணமாகி

தண்டனையை

ஏற்றுக் கொள்ளும்

இயல்பைத் தருவதும்


தன்னிடம்

இருப்பதைக்

கொண்டு

திருப்தி பெறும்

மனதைப் பெறுவதும்


பிறர்

வாழ்வைக் கண்டு

பொறாமை 

கொள்ளாத

குணம் நிலைப்பதும்


சக 

மனிதர்களையும்

மனித இனமென

உணர்ந்துகொள்ள

உதவுவதும்


தொழிலாளியின்

வேதனையை

முகம் பார்த்து

தெரிந்து கொள்வதும்


நிம்மதியின்

நிழலில்

வாழ வழி 

காட்டும்

புரிதல்


உணர்வுகளைப்

புரிந்து கொள்ள

உயர்வை அடைந்திட 

உனக்கு அது

வழி சொல்லும்!!! 

- கவிஞர் வடகரை ஃபரீது வாஹிதி .

Published in Nagore Puranam April month magazine 2025


Post a Comment

0 Comments