கிறித்தவ சமயத்தினரின் தமிழ்த்தொண்டு
கிறித்தவ சமயத்தினர் தமிழகத்தில் சமயப் பணிக்காக வந்திருந்தாலும், தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர்கள் வழங்கிய கொடை அளப்பரியது; தமிழ் மொழியின் ஆழத்தையும் இலக்கணத்தையும் நுணுகி ஆராய்ந்து வீரமாமுனிவர் போன்றோர் தனித்துவமான இலக்கண நூல்களை அளித்ததுடன், ஜி.யூ. போப் போன்றோர் தமிழ் இலக்கணத்தை மேலைநாட்டினரும் போற்ற வழிவகுத்தனர்;
அச்சுக்கலையை அறிமுகப்படுத்தி பைபிள் முதலான பல தமிழ் நூல்களை அச்சிட்டு இலக்கியப் பரவலாக்கத்திற்கு வித்திட்டதுடன், வேதநாயகம் சாஸ்திரியார், எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை, வீரமாமுனிவர் போன்றோர் உன்னதமான இலக்கியப் படைப்புகளையும், பல கீர்த்தனைகளையும் தமிழுக்கு வழங்கினர்; தமிழ் சொற்களின் கருவூலமாக அகராதிகளை உருவாக்கியதில் முன்னோடிகளாகத் திகழ்ந்து தமிழ் மொழிக்கு வளம் சேர்த்ததுடன், தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களை நிறுவி அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்து அறிவொளியின் பயணத்திற்கு உதவினர்;
தமிழ் உரைநடையை செழுமைப்படுத்தியதுடன், ஒடுக்கப்பட்டோரின் கல்வி மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து சமூக நீதிக்கான போராட்டத்திற்கு உந்துசக்தியாக அமைந்தனர்; இவ்வாறாக, கிறித்தவ சமயத்தினர் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி, மற்றும் சமூக மேம்பாடு எனப் பன்முகத் தளங்களில் ஆற்றிய தொண்டு என்றும் போற்றத்தக்கது.
செய்தித்தாள் (Daily), கிழமைத்தாள் (Weekly), திங்கள் தாள் (Monthly) ஆகிய அறிவுக் கருவூலங்களை இந்நாட்டில் தோற்றுவித்த பெருமையும் கிறித்தவர்க்கு உண்டு. இவ்வாறு வகையில் மொழித் தொண்டு புரிந்தனர்.
ராபர் டி நொபிலி
இத்தாலி நாட்டில் பிறந்து தென் பாண்டிய நாடு சென்று வாழ்ந்த பெரியவர் இவர். தென்மொழி வடமொழிகளில் புலமை பெற்றவர். தமிழருடைய நடையுடை பாவனைகளை மேற்கொண்ட இவர் 'தத்துவ போதக சாமி' என்று தம் பெயரையும் மாற்றிக் கொண்டார். மந்திரமாலை, கடவுள் நிருணயம், ஏசுநாதர் சரித்திரம் என்பவை இவர் எழுதிய நூல்களாகும். ஞான உபதேசம் எனும் நூல் இவருடைய சொற்பொழிவுகளின் தொகுப்பாகும்.
சீகன்பால்கு
இவர் ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர். தரங்கம்பாடியில் தங்கிச் சமயத் தொண்டு புரிந்தபோது அங்கு ஓர் அச்சுக்கூடத்தையும், காகிதத் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவித் தமிழ்த் தொண்டும் செய்தார். இவர் விவிலிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 'தமிழ் - இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு' எனும் நூலை இயற்றித் தமிழ் மொழியின் மேன்மையை மேல் நாட்டார்க்கு உணர்த்தியுள்ளார்.
வீரமாமுனிவர்
இலத்தீன், தமிழ், தெலுங்கு, பாரசீக மொழிகள் ஆகிய பன்மொழிகளில் புலமை மிக்கவர். இவர் இயற்பெயர் 'கான்ஸ்டான் டியஸ் பெஸ்கி' என்பதாகும். எண்ணற்ற இலக்கியங்களைத் தமிழில் படைத்தவர் இவர். காப்பியம், பிரபந்தம், உரைநடை, இலக்கணம். அகராதி, மொழிபெயர்ப்பு ஆகிய பல துறைகளில் உழைத்துத் தமிழ்மொழியை மேன்மையுறச் செய்தவர்.
தேம்பாவணி என்னும் பெருங்காப்பியமே இவர் தொண்டின் மேன்மைக்குப் போதிய சான்று பகரும்.
வீரமாமுனிவர் 'திருக்காவலூர்க் கலம்பகம்' என்னும் நூலை இயற்றியுள்ளார். மேலும், 'கித்தேரி அம்மாள் அம்மானை'. 'அடைக்கல நாயகி வெண்கலிப்பா' ஆகிய நூல்களையும், தேவாரப் போக்கில் அமைந்த 'கருணாம்பரப் பதிகம்' என்ற ஒன்றையும் இயற்றியுள்ளார். தமிழ் நீதி நூல்கள் சிலவற்றைத் 'தமிழ்ச் செய்யுள் தொகை' என்னும் பெயரால் தொகுத்துள்ளார்.
நகைச்சுவை ததும்பும் 'பரமார்த்தகுரு கதை' என்னும் உரைநடை நூலையும் வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம்' ஆகிய நூல்களையும் படைத்துள்ளார். திருக்குறள் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
'தொன்னூல் விளக்கம்', 'கொடுந்தமிழ் இலக்கணம்' ஆகிய இலக்கண நூல்களையும் செய்துள்ளார்.
வீரமா முனிவரின் 'சதுரகராதி'யே தமிழில் தோன்றிய முதல் அகராதி என்னும் சிறப்பைப் பெற்றிருக்கிறது. மேலும் 'தமிழ் - இலத்தீன் அகராதி', 'போர்த்துக்கீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி' ஆகிய இரு அகராதிகளையும் இயற்றியுள்ளார்.
எல்லிசர்
தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் புலமைமிக்க இவர். வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை இவ்விரு மொழிகளிலும் 'வரைந்துள்ளார். திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதியுள்ளார். தமிழ்ச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாப்பதில் பற்றுடையவர்.
இரேணியஸ்
ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். 'புதிய ஏற்பாடு' முழுவதையும் தமிழில் வரைந்துள்ளார். தமிழ் இலக் கண நூல் ஒன்றையும், வேத உதாரணத் திரட்டையும் தொகுத்துத் தந்துள்ளார்.
போப்பையர்
இவர் திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல் களையும், புறநானூறு. புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களில் சில பகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள் ளார். இத்தொண்டினால் இவருடைய தமிழ்ப்பற்றை அறிய முடிகிறது. இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் 'ஒரு தமிழ் மாணவன்' என்று பொறிக்குமாறு செய்தவர். இவர் எழுதிய இலக்கண நூல் ஒன்றினைத் திரு. வி.க. வியந்து பாராட்டியுள்ளார். போப்பையர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக இருந்து தமிழ்த்தொண்டு புரிந்திருக்கிறார்.
டாக்டர் கால்டுவெல்
பன்மொழிப் புலமைமிக்க இச்சான்றோர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அரிய நூலை இயற்றியுள்ளார். இவருடைய 'திருநெல்வேலிச் சரித்திரம்' வரலாற்று ஆசிரியருக்குப் பெரிதும் பயன்தரும். தமிழில் 'நற்கருணைத் தியான மாலை', 'தாமரைத் தடாகம் ஆகிய நூல்களை வரைந்துள்ளார்.
மேற்கூறிய சான்றோரெல்லாரும் மேலைநாட்டில் தோன்றித் தமிழகம் வந்து தமிழ்த் தொண்டாற்றியவர்கள். இங்குப் பிறந்து இம்மொழிக்குத் தொண்டாற்றியவரும் உளர்.
வேதநாயகம் பிள்ளை
சோழ நாட்டுக் குளத்தூரில் பிறந்த இவர் 'தமிழில் தோன்றிய முதல் நாவல் என்னும் நாவலையும் இயற்றியுள்ளார். திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதா அந்தாதி, பெரியநாயகி அம்மாள் பதிகம் ஆகிய சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். この தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். இவருடைய இசைத்திறனைச் 'சத்திய வேத கீர்த்தனை', 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை' ஆகிய நூல்களில் காணலாம்.
கிருஷ்ணப் பிள்ளை
இவர் முதலில் வைணவராயிருந்து பின்னர்க் கிறித்தவ சமயத்தைத் தழுவினார். ஆங்கிலப் புலவர் ஜான் பனியனின் ('The Pilgrims Progress') என்ற நூலைத் தழுவி இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியத்தை இயற்றியுள்ளார். இவரைக் 'கிறித்தவக் கம்பன்' என்று பாராட்டுவர்.
இரட்சணிய மனோகரம், இரட்சணியக் குறள் என்பன இவர் எழுதிய பிற நூல்களாகும்.
நல்லூர் ஞானப்பிரகாசர்
பன்மொழிப் புலமைமிக்க இவர், சொல்லாராய்ச்சியில் பற்றுடையவர். இவருடைய 'சொற் பிறப்பு ஒப்பியல் தமிழகராதி' என்னும் நூல் மொழி ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்வதாகும்.
சாமுவேல் பிள்ளை
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு நூல்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காட்டும் 'தொல்காப்பிய நன்னூல் என்னும் நூலை இயற்றியுள்ளார்.
வேதநாயக சாஸ்திரியார்
இவர் பெத்லேகம் குறவஞ்சி எனும் நாடக நூலை இயற்றியுள்ளார்.
இவ்வாறு கிறித்தவச் சான்றோர் தமிழுக்குத் தொண்டு செய்தனர்.
0 Comments