வைணவ சமயத்தினரின் தமிழ்த்தொண்டு
வைணவ சமயமும் தமிழ் மொழிக்கு கணிசமான தொண்டினை ஆற்றியுள்ளது. சைவ சமயத்தைப் போலவே, வைணவமும் தமிழ் மண்ணில் ஆழமாக வேரூன்றி, தமிழ் இலக்கியத்திற்கும் பக்தி இயக்கத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
பன்னிரண்டு ஆழ்வார்கள் :
வைணவ சமயம் இந்நாட்டின் பழம்பெரும் சமயமாகும்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வர். ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார். திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார். நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் ஆகியோர் பன்னிருவர். இவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எனப்படும்.
முதல் ஆழ்வார்கள் :
பொய்கையாழ்வார் - பொற்றாமரைப் பொய்கையில் தோன்றிய காரணத்தினால் பொய்கையார் என்னும் பெயர் பெற்றார். இவர் வைணவ சமயத்தின் 'விடிவெள்ளி' என்று போற்றப்படுகிறார். இவர் முதல் திருவந்தாதி என்னும் நூறு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
யார் எந்த வடிவிலே காண்கிறோமோ அந்த வடிவில் இருக்கி றான் இறைவன். யார் எந்தப் பெயரை இட்டு அழைக்கிறோமோ அந்தப் பெயரே அவனுடைய பெயர். யார் எவ்வாறு விரும்பிச் சிந்திக்கிறார்களோ அவ்வாறே திகழ்வான் என்று உரைக்கின்றார் பொய்கையார்.
இறைவனை வணங்குவோர்க்கு அவன் அருளுவான் என்கிறார்.
திருமாலின் திரு அவதாரங்களை எண்ணி எண்ணி மகிழ்பவர் பொய்கையார்.
திருமால் உலகளந்த தன்மையை நினைத்துப் பாராட்டுவார். ஆணவத்தின் வடிவமான இரணியனை அழிக்க நரசிம்மாவதாரம். கொண்ட நிலையைச் சில சமயம் பாராட்டுவார். திருமால் கன் னாகப் பிறந்து ஆய்ச்சியர் வீட்டில் வெண்ணெயை விழுங் தன்மையை ஒருசமயம் நினைந்து நெஞ்சுருகுவார்.
இவ்வாறு இறைவனின் பல்வேறு ஆற்றல்களைக் கண்டு வியக்கிறார் பொய்கையார்.
பூதத்தாழ்வார் :
இவர் மகாபலிபுரம் என வழங்கும் திருக்கடல் மல்லையில் தோன்றியவர். இவ்வுடலின் ஐம்பெரும் பூதங்களுமே திருமால்தான் என்று பாடியவர். இதன் காரணமாக இவர் பூதத்தாழ்வார் எனப் பட்டார். 'இரண்டாம் திருவந்தாதி' என்னும் நூறு பாசுரங்களை இவர் பாடியுள்ளார்.
பொய்கையாரைப் போலவே பூதத்தாழ்வாரும் திருமாலின் அவதாரங்களை வியந்து பாராட்டியுள்ளார். இவருக்கும் கண்ணன் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இறைவனைத் தமிழில் பாடி மகிழ் வதையே பெரிய தவம் எனக் கருதுகிறார் இவர்.
பேயாழ்வார் :
இவர் சென்னை மயிலாப்பூரில் தோன்றியவர் ஆவார். பக்தி மேலீட்டால் பாடுதல், ஆடுதல், அழுதல், சிரித்தல் முதலான செயல்களைச் செய்தமையால் இப்பெயரினைப் பெற்றார். மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.
எல்லையற்ற ஆற்றல் படைத்த இறைவனின் எளிமையை இவர் வியந்து பாராட்டுகிறார்.
கண்ணன்பால் தீராத காதலுடைய பேயாழ்வார் சமரச மனப்பான்மை மிக்கவர். அவர் திருமாலையும் சிவபெருமானையும் ஒரு நிலையிலேயே கருதினார்.
மேற்குறித்த மூன்று ஆழ்வார்களும் ஒரே காலத்தவராவர். இவர்கள் "முதலாழ்வார்கள்" என்றழைக்கப்பட்டனர்.
திருமழிசையாழ்வார் :
சென்னை அடுத்த திருமழிசையில் தோன்றியவர். பேயாழ் வாரிடம் உபதேசம் பெற்றவர்.
திருமழிசை ஆழ்வார் வீர வைணவர். கண்பார்வை செல்லும் இடங்களில் எல்லாம் திருமாலையே கண்டு மகிழ்ந்தவர். தமக்கு முன் வாழ்ந்த ஆழ்வார்களைப் போலவே இவருக்கும் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு உண்டு. கண்ணனின் இளமைச் செயல்களில் நெஞ்சைப் பறிகொடுத்த இவர், கண்ணன் ஆய்ச்சியரிடம் பாலை உண்டதையும். மண்ணை உண்டதையும், வெண்ணெய் உண்டதையும், மாயச் செயல் பலபுரிந்ததையும் ஒரு சேரப் பாடியுள்ளார்.
திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பனவற்றை இவர் பாடியருளினார்.
பெரியாழ்வார் :
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர் பெரியாழ்வார். இவருக்குப் 'பட்டர்பிரான்', 'விஷ்ணு சித்தன்' என்னும் பெயர்களும் உண்டு. ஆண்டாளை வளர்த்தவர் இவரே. திருமொழி, திருப்பல்லாண்டு என்பவை இவர் இயற்றியவை. கிருஷ்ண பரமாத்மாவிடம் பேரன்பு கொண்ட இவர், கண்ணனைக் குழந்தையாகவும், தம்மைத் தாயாகவும் கருதி அக்குழந்தையைத் தாலாட்டிச் சீராட்டி மகிழ்கிறார். யசோதையின் தாயுள்ளத்தை இவரிடம் காண்லாம்.
கண்ணனின் குழலிசை இன்பத்தை மெய்மறந்து பாராட்டுபவர் பெரியாழ்வார். உலக உயிர்கள் அனைத்தும் அவனது இசையில் மூழ்கிக் கிடக்கும் தன்மையை உள்ளம் உருக உரைக்கின்றார். திருமால் கண்ணனாகவும் இராமனாகவும் அவதாரம் செய்த சிறப்பினை எண்ணி எண்ணி இவர் உள்ளம் மகிழ்கிறார். இவ்வாறே திருமாலின் ஒவ்வோர் அவதாரச் சிறப்பையும் பெரியாழ்வார் பாராட்டிக் கூறுகி றார்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி :
'கோதை' என்றும் 'சூடிக் கொடுத்த நாச்சியார்' என்றும் அழைக்கப்படுபவர் ஆண்டாள் ஆவார். திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற நூல்களை அருளியவர். இறைவனைக் காதலனாகவும், தன்னைக் காதலியாகவும் நினைத்துப் பாடி மகிழ்ந்தவர். இவரது பாடல்கள் தமிழ் இலக்கியப் பூங்காவில் என்றும் வாடாத வண்ண மலர்கள் ஆகும். கண்ணனின் தரிசனத்தைக் கண்டு களிப் பதே நீரோட்டம் என்று கூறுகிறது திருப்பாவை. இது இறைவனைத் தனியாக வணங்குவதைவிட அனைவரும் சேர்ந்து வழிபடுவதன் சிறப்பினை விளக்கிக் காட்டுவதாகும். திருப்பாவையில் காணப்படும் முப்பது பாசுரங்களும் சொற்சுவையும் பொருட் சிறப்பும் மிக்கவை.
'நாச்சியார் திருமொழி'யும், 'திருப்பாவை' போலவே சிறப் புடையது. ஆண்டாளின் உள்ளத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது நாச்சியார் திருமொழி.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் :
சோழவள நாட்டில் மண்டங்குடியில் தோன்றியவர். 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர். 'திருமாலை', 'திருப்பள்ளியெழுச்சி' என்பவை இவர் பாடியவை.
பச்சை மாமலை போன்ற இறைவனின் மேனியும், பவளவாயும், கமலச் செங்கண்ணும் இவரைப் பெரிதும் கவர்ந்தவை ஆகும். இவை தரும் இன்பம் இந்திரலோகத்தைவிடச் சிறந்தது எனப் பாடியவர்.
திருமங்கையாழ்வார் :
இவர் சோழ நாட்டில் திருக்குறையூரில் கள்ளர் மரபில் தோன்றியவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நீலன் என்பது. இளமையில் வில்வித்தை பயின்று சோழ மன்னரின் தளபதியாகி பகைவரை வென்றவர். 'பரகாலன்' என்று பாராட்டப்பட்டவர். இவருடைய வீரத்தைக் கண்டு வியந்த சோழ மன்னர் இவரைத் திருமங்கை நாட்டுச் சிற்றரசனாக நியமித்தார். திருமங்கை மன்னன் குமுதவல்லி என்னும் பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். மனைவியின் வேண்டுகோள்படி பக்தர்களுக்கு அன்னமிடும் தொண் டினைப் புரிந்து வந்தார். இப்புணியினைத் தொடர்ந்து நிறைவேற்றத் திருடவும் முற்பட்டார்.
இவர் இயற்றிய நூல்கள் சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றி ருக்கை, பெரிய திருமொழி என்பனவாம்.
திருப்பாணாழ்வார் :
இவர் சோழவளநாட்டில் உறையூரிலே தோன்றியவர். பாணர் மரபில் வந்தவர். இதனால் திருவரங்கத்தின் உள்ளே செல்ல வகையில்லாமையால், காவிரியின் தென்கரையில் இருந்தவாறே வீணைமீட்டி இறைவனுடைய திருப்புகழ்களைப் பாடி வழிபட்டார். இதன்மூலம் இவரது பக்தியின் மேன்மையை அறியலாம்.
திருமாலின் கருணையை எண்ணி எண்ணி வியந்தவர். இதனால் 'அமலனாதிபிரான்' என்று தொடங்கும் திருமொழியைப் பாடினார்.
குலசேகராழ்வாரின் பெருமை :
இவர் திருவஞ்சைக்களத்தில் சேரமரபில் தோன்றியவர். இவ்வூர் கொல்லிநகர் என்றும் வழங்கும். பெருமாள், குலசேகரப் பெருமாள் என்ற பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார். குலசேகரர் 'பெருமாள் திருமொழி' என்னும் திவ்வியப் பிரபந்ததைப் பாடியருளினார். இது பத்துத்திருமொழிகளாக அமைந்துள்ளது.
கடல்மேல் செல்லும் கப்பலில் இருக்கும் பறவை எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும் மீண்டும் அக்கப்பலையே சென்றடையும். அதுபோல், வாழ்க்கைக் கடலில் உழன்று திரியும் மக்கள் இறுதியாக இறைவனையே நாடவேண்டும் என்று கூறுகிறார்.
நம்மாழ்வார் :
இவர் ஆழ்வார் திருநகரி என வழங்கும் திருக்குருகூரில் தோன்றினார். காரியார் என்பாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருமகனாராகத் தோன்றினார். இவருக்குச் சடகோபன், பராங்குசன், காரிமாறன், தமிழ்மாறன், வகுளாபரணன் முதலிய பெயர்களும் உண்டு.
திருவிருத்தம். திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்னும் மூன்று தமிழ்ப் பிரபந்தங்களைச் செய்துள்ளார். இவரது திருவாய் மொழிப் பாசுரங்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இதனால் நினைவிற்கொள்வதற்கு உதவிபுரிகிறது. இவரை 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்றும் போற்றுவர்.
பக்தியால் உலகில் எதனையும் பெறமுடியும் என்பது அவர் எண்ணம். நம்மாழ்வார்க்குக் காணுகின்ற பொருளனைத்தும் கண்ணன் வடிவாகவே காட்சியளிக்கிறது.
உயிரினங்கள் சிறிதும் துயரமின்றி வாழ ஒரே வழி இறை வனைத் தொழுவதேயாகும் என்பது இவர் கருத்து.
மதுரகவியாழ்வார் :
இவர் நம்மாழ்வரின் சீடர். பாண்டிய நாட்டுத் திருக்கோளூரைச் சார்ந்தவர். நம்மாழ்வாரைத் தம் கண்கண்ட தெய்வமாகப் போற்றி யவர். செவிக்கினிய சிந்தைக்கினிய பல பாடல்களைப் பாடியவர். இதனால் இவர் மதுரகவி ஆழ்வார் எனப் பெயர் பெற்றார்.
அந்தணர் மரபினரான மதுரகவியார் வேளாள குலத்துவரான நம்மாழ்வர் மீது பக்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைணவர்களின் தமிழ்த தொண்டு
தமிழ்நாட்டில் திருமால் வழிபாடு பண்டைக் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. பக்தி இயக்க காலத்தில் பன்னிரு ஆழ்வார்கள் தோன்றித் திருமால் வழிபாட்டை மிகவும் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றினர். திவ்வியப் பிரபந்தங்கள் திருமால் சமயம் என ஒரு தனிச்சமயப் பிரிவையே தோற்றுவித்தன.
வைணவ ஆசாரியர் வரலாறுகளைக் கூறும் நூல்கள் 'குரு பரம்பரை' எனப்படும். வைணவ ஆசாரியர் வரலாறு நாத முனி களோடு தொடங்குகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களைத் தொகுத்தவர் இவரே! திவ்வியப் பிரபந்தம் நாலாயிரத்துக்கும் மிகச்சிறந்த விளக்கம் எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.'
தமிழ்வேதம் என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்குப் பெரிய வாச்சான் பிள்ளை இருபத்து நாலாயிரப்படி என்ற விளக்கம் செய்தார்.
ஸ்ரீ இராமானுஜர்
ஸ்ரீ ராமானுஜர் 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். தந்தை -கேசவ சோமாஜி; தாய் - காந்திமதி. மனைவி பெயர் தஞ்சம்மாள்.
தாழ்த்தப்பட்டவர்களைக் காந்தியடிகள் 'அரிஜனங்கள்' என்று அழைத்ததார். இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவர் களைத் 'திருக்குலத்தார்' என்று அழைத்தர். கோவில் நுழைவுக்கு வித்திட்ட வித்தகர் இராமானுஜர்.
எந்த வகுப்பினரும் வைணவராகலம் என்பது இவரது கொள்கை.
இதன்படி மண்பானை செய்வோர், தச்சர், ஓவியர், வணிகர், மாடு மேய்ப்போர் என எந்த வேறுபாடும் கருதாது இராமானுஜர் செய்த தொண்டு மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
இராமானுஜரின் தொண்டினை முதலில் தமிழ் இலக்கிய வடிவில் நிலை நிறுத்தியவர் அமுதனார். இவர் 'இராமானுச நூற்றந் தாதி' என்ற நூலை இயற்றினார்.
இராமானுஜரை 'நான்மறையின் தவக் கொழுந்து' என வைணவ உலகம் போற்றுகிறது. இவருக்கு எம்பெருமானார். இளையாழ்வார். பாஷ்யகாரர், உடையவர் என்னும் பெயர்களும் உண்டு.
இவர் அருளிச் செய்த நூல்கள் 'ஸ்ரீபாஷ்யம்', 'வேதாந்த தீபம். 'வேதாந்த சாரம்', 'கீதா பாஷ்யம்', 'வேதார்த்த சங்கிரகம்' என்பன.
வேதாந்த தேசிகர்
14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வேதாந்த தேசிகர் (ஆசிரியர்) காஞ்சிபுரத்தில் பிறந்தார், தந்தையார் - அனந்தசூரி, தாயார் தோத்தாத்ரி அம்மையார். இயற்பெயர் திருவேங்கட முடையான் என்பது. இருபது வயதுக்குள் எல்லாச் சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் 'அயக்கிரீவ தோத்திரமும்', 'தேவ நாயக தோத் திரமும்' வடமொழியில் இயற்றினார். பின்னர் 'மும்மணிக்கோவை' முதலான தமிழ் நூல்களை இயற்றினார். வடநாட்டுப் புலவரை வாதில் வென்றார். அந்த வாதமே 'சததூஷணி' என்னும் நூல்.
வடமொழியில் இவர் இயற்றிய சாத்திரங்கள் 82 என்பர். தமிழில் பாடிய 'அமிர்த ரஞ்சனி' முதலான பிரபந்தங்கள் 24. இவை தேசிகப் பிரபந்தங்கள் என அழைக்கப்படுகின்றன.
பிள்ளை லோகாசாரியார்
திருமாலின் அம்சமாகக் கருதப்படும் பிள்ளை லோகாசாரியார் 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். முடும்பை என்னும் நகரில் பிறந்தார். தந்தையார் வடக்குத் திருவீதிப்பிள்ளை: தாயார் - சீரங்கநாச்சியார்.
இவர் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் வல்லவர். இவருடைய சீடர்கள் பலர், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். பிள்ளை லோகாசாரியார் மணிப் பிரவாள நடையில் 18 சாத்திரங்களைப் படைத்துள்ளார்.
சாதியினால் உயர்வு தாழ்வு இல்லை, ஞானத்தாலும் பக்தியாலும் உயர்வு தாழ்வு உண்டாகிறது என்னும் கொள்கையுடையவர்.
இவரது ஸ்ரீவசனபூஷணம் என்னும் நூல் மிகவும் புகழ் பெற்றதாகும்.
இவ்வாறு வைணவ ஆசாரியர் பலரும் தமிழையும் சமயத் தையும் வளர்த்தனர்.
0 Comments