google-site-verification: googlef09a89005d7755ea.html ஐந்து பெரிது ஆறு சிறிது – வைரமுத்து

ஐந்து பெரிது ஆறு சிறிது – வைரமுத்து

 

கவிஞர் வைரமுத்து

 தமிழ்த் திரைப்பட உலகிலும் தமிழ் இலக்கியத்திலும் ஒளிரும் புகழ்மிக்க படைப்பாளி ஆவார். 1953-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, கலையுலகில் தனித்த இடம் பிடித்தார். சமூக நலன், விவசாயம், இயற்கை, காதல், தத்துவம் போன்ற விரிந்த தளங்களில் உணர்வுப் பூர்வமாகவும் ஆழமான சிந்தனையுடனும் எழுதுகிறார். "5 பெரிது 6 சிறிது" போன்ற வரிகள் மூலம் வாழ்வின் நுண்ணிய உண்மைகளை எளிமையாகத் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றவர்.

 பாவனையான சொற்கள், இலக்கிய அழகு, கற்பனை நயம் என அனைத்தையும் இணைத்து பாடல்கள் இயற்றுகிறார். இவரது பங்களிப்பு காரணமாக 7 முறை தேசிய திரைப்பட விருது பெற்றுள்ளார். மேலும், 2003-ல் இந்திய அரசால் பத்மஶ்ரீ விருதும் வழங்கப்பட்டது. “காற்றின் மொழி”, “மரங்கள் தென்றலுடன் பேசுகின்றன” போன்றவை அவரது முக்கிய நூல்களாகும். தமிழின் நவீன கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய வைரமுத்து, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படைப்புகளால் இடம்பிடித்துள்ளார்.

ஐந்து பெரிது ஆறு சிறிது

ஆறறிவு படைத்த மனிதர்களைவிட ஐந்தறிவு மிருகங்கள், பறவைகள் சிறந்தவை என வைரமுத்து இக்கவிதையில் குறிப்பிடுகிறார். “சீ மிருகமே!”என்று மனிதனைத் திட்டாதே மனிதனே என்று முதலில் எச்சரிக்கிறார்.ஏனேன்றால் எந்த விலங்கும் இரைப்பைக்கு மேலே இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை. எங்கேனும் தொப்பைக் கிளியோ

தொப்பை முயலோ பார்த்ததுண்டா ? என்று கவிஞர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும் எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை. இன்னொன்று பறவைக்கு வேர்ப்பதில்லை எந்த பறவையும் கூடுகட்டி வாடகைக்கு விடுவதில்லை எந்த விலங்கும் தேவையற்ற நிலம் திருடுவதில்லை. கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டில் வாழும் விலங்குகளிடம்தான் மனிதனிடம் கூட்டுவாழ்க்கை குறைந்துவிட்டது என்பதை வைரமுத்து எடுத்துரைக்கிறார். அறிந்தால் ஆச்சரியம் கொள்வாய் உடம்பை உடம்புக்குள் புதைக்கும் தொழு நோய் விலங்குகளுக்கில்லை மனிதா இதை மனதில்கொள்.

கர்ப்பவாசனை கண்டு கொண்டால் காளை பசுவைச் சேர்வதில்லை ஒருவனுக்கொருத்தி என்று வாழ்வது மனிதா உனக்கு வார்த்தைஆனால் புறாவுக்கு வாழ்க்கை எந்த புறாவும் தன் ஜோடியன்றி பிறஜோடி தேடுவதில்லை என்பதை மனிதா உணர்வாய். பூகம்பம் வரப்போகிறது என்றால் விலங்குகளும், பறவைகளும் முதலில் அறிந்துகொண்டு விலங்குகள் அலைபாயும் பறவைகள் அடிவயிற்றில் சிறகடிக்கும். மனிதா! இப்போது சொல் அறிவில் ஆறு பெரிதா ? ஐந்து பெரிதா ? என்று வைரமுத்து கேள்வி எழுப்புகிறார்.

மரணம் நிஜம் மரணம். வாழ்வின் பரிசு. மாண்டால் மானின் தோல் ஆசனம் மயிலின் தோகை விசிறி யானையின் பல் அலங்காரம் ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம். ஆனால் மனிதனே நீ மாண்டால் சிலரை நெருப்பே நிராகரிக்கும் என்பதால்தானே புதைக்கவே பழகினோம். அதனால் “சீ மிருகமே!”என்று மனிதனைத் திட்டாதே மனிதனே. கொஞ்சம் பொறு காட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது. ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தைத் திட்டுகிறது ” சீ மனிதனே!” என்று கூறி வைரமுத்து கவிதையை முடிக்கிறார். மனிதனே எந்த உயிரையும் குறைவா மதிப்பிடாதே என்ற கருத்தாழத்தில் இக்கவிதை அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments